Vijay Milton – The notable cinematographer turns director with ‘Goli Soda’. Check out the concept and what he has to say on the film here…
ப்ரியமுடன், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9 படங்களின் யதார்த்த ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன்
டைரக்ட் செய்து வரும் படம் “கோலி சோடா” படத்தைப் பற்றி அவர் கூறும் போது:-
ஒரு காலை நேரத்தில் கோயம்பேடு மார்கெட் போயிருந்தேன். யத்தேச்சையா கடைகளுக்கு மேலே இருந்த பரணைப் பார்த்தேன். அதில் வரிசையாக நூத்துகணக்கான இளைஞர்கள் தூங்கிட்டு இருந்தாங்க. அந்த ஃப்ரேம் எனக்கு ஆயிரம் கதைகள் சொல்லுச்சு. அவங்க யாரு, என்னன்னு விசாரிச்சப்போ கிடைச்ச லைன் தான் “கோலி சோடா”.
அவங்களுக்கு இந்த மார்க்கெட்டை தாண்டி வேறு எதுவும் தெரியாது. அவங்களுக்குன்னு எந்த அடையாளமும் கிடையாது. வயசு ஆயிருச்சுனா வாழ்க்கை அவ்வளவுதான். வயசானாலும் மார்க்கெட்டை விட்டு போக மாட்டாங்க. கஞ்சா விக்கிறது, டீக்கடை போடுறதுன்னு அங்கேயேதான் சுத்தி வருவாங்க. இப்படிப்பட்ட நாலு பசங்க, நம்ம வாழ்க்கையும் இப்படியே போயிடுமோ, நமக்கான அடையாளம் என்ன?னு யோசிக்கும் போது கதை ஆரம்பிக்குது. இதனால நம்ம அடையாளத்துக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுமோ?னு ஏற்கனவே அடையாளத்தோட இருக்கிற கடை முதலாளிங்க யோசிக்கும் போது பிரச்சனை ஆரம்பிக்குது. இப்படி ரெண்டு வெவ்வேற எண்ணங்களோட மோதல் தான் “கோலி சோடா”.
பசங்க படத்துல நடிச்ச பசங்க இப்ப வளர்ந்திருப்பாங்க. அவங்களையே நடிக்க வெச்சேன். அந்த நாலு போரையும் ஊர்ல இருந்து வரவழைச்சி டெஸ்ட் ஷூட் எடுத்தோம். சனி,ஞாயிறுகள்ல கோயம்பேடு மார்க்கெட்ல காலையில் இருந்து ஈவினிங் வரை சுத்த விட்டு அதையும் ஷூட் பண்ணினோம். மார்க்கெட்ல சுத்தின அழுக்கு, நாற்றம் அத்தனையும் அவங்களுக்கு அத்துப்படி ஆகிருச்சு. மூட்டை தூக்கி உடம்பு இருகிருமே! அதுக்காக ஷூட்டிங்கைத் தள்ளி வெச்சு நாலு பேரையும் ஜிம்முக்கு அனுப்பினோம். அரும்பு மீசைக்காக ஏகப்பட்ட ட்ரீட்மென்ட். நான் நினைச்ச மாதிரி அவங்க உருமாறி வந்த பின்னாடி தான் ஷூட்டிங்க்கு கிளம்பினோம்.
இயக்குநர் : விஜய் மில்டன்
வசனம் : பாண்டியராஜ்
இசை : அருணகிரி
பின்னணி இசை : சீலின்
படத்தொகுப்பு : ஆண்டனி
பாடல்கள் : கானா பாலா
நடனம் : RK .விஜய் முருகன்
சண்டைப் பயிற்சி : சுப்ரீம் சுந்தர்
மியூசிக் : சோனி
தயாரிப்பு : N.சுபாஷ் சந்திர போஸ், பரத் சீனி