Gangers - From April 24th

Retro - From May 1st

Biriyani – Press Release

பிரியாணி கார்த்திக்கு மிகவும் எதிர்பார்ப்பு அளிக்கிறது. பையாவுக்கு பிறகு ஒரு ப்ளேபாய் வாழ்க்கை பின்பற்றும் ஸ்டைலிஷ் கதாநாயகனாக கார்த்தி பிரியாணியில் தோன்றுகிறார் என்பதே இப்படத்தின் சிறப்பு அம்சம். படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்குண்டான அச்சம் எதுவுமின்றி ஒரு உல்லாச பயண உணர்வோடு நான் மிகவும் ரசித்து நடித்த படம் பிரியாணி என்கிறார் கார்த்தி மேலும் அவர் கூறுகையில் இது முற்றிலும் வெங்கட் பிரபு முத்திரையுள்ள படம். நான், வெங்கட் பிரபு, ராம்ஜி, யுவன் சங்கர் ஆகியோர் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.எனவே நாங்கள் ஒன்று சேர்ந்து படத்துக்காக பணியாற்றும் போது மிகவும் ஜாலியாக பணியாற்றினோம். நிஜ வாழ்க்கையில் என்பது போல, அதன் பிரதிபலிப்பாக படம் முழுக்க ஜாலி மூட் இருக்கும். படத்தின் பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் என்று எல்லாமே சிறப்பாக அமைந்துள்ளது. பிரியாணியில் என்னுடைய பாடி லாங்வேஜையே முற்றிலும் மாறுபட்ட பாணியில் என்னை நடிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு.

ஹன்சிகா படபிடிப்பு வேளையில் சீரியஸாக இல்லாமல் எந்த வித பதற்றமுமின்றி உற்சாகத்துடன் நடித்துள்ளார். மேலும் மண்டி தக்கர் என்ற பஞ்சாப் நடிகை படத்தில் டர்னிங் பாயிண்டான கதாப்பாத்திரமாக வருகிறார். இவர் வசனங்களை மனப்பாடம் செய்து சொல்லி நடித்த விதம் எல்லோரையும் வியப்படைய வைத்துள்ளது. என் சீனியர் ஆன ராம்கி அவர்களை குறிப்பிட்டே ஆக வேண்டும்.அவருடைய ரசிகனாக சினிமா பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

யுவனுக்கு பிரியாணி 100 வது படம். அவரது பங்களிப்பும் உழைப்பும்  படத்தை மேலும் மெருகூட்டியுள்ளது. எல்லோரையும் ஈர்க்கும் சுவாரஸ்யமான த்ரில்லர் படமாக பிரியாணி அமையும் என்று சொல்லி முடித்தார் கார்த்தி.

ஒளிப்பதிவு: சக்தி சரவணன்

எடிட்டிங்:பிரவின் – ஸ்ரீ காந்த்

கலை: விதேஷ்

நடனம்:ராஜு சுந்தரம்

இணை தயாரிப்பு: S.R.பிரகாஷ் பாபு,S.R.பிரபு

தயாரிப்பு : K.E.ஞானவேல் ராஜா