75ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு கோவை வடக்கு வட்டம் வெள்ளக்கிணர் கிராமம் ஸ்ரீ அதிர்ஷ்டலட்சுமி கார்டன் குடியிருப்போர் சார்பில் செய்த நற்செயல்கல்!
கோவை வடக்கு வட்டம் வெள்ளக்கிணர் கிராமம் ஸ்ரீ அதிர்ஷ்டலட்சுமி கார்டன் (டெக்ஸ்மோ பின்புறம்) குடியிருப்போர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. “சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா” வை சிறப்பாக கொண்டாடப்பட்டு தேசிய கொடி ஏற்றி, சுதந்திர மடைந்து 75 வருடமானதை சிறப்பித்து வருங்கால சந்ததையினர் நினைவு கூர்ந்தனர்.
அக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சாலை ஓரங்கங்களில் பலவகை கனிதரும் மரங்கள் மற்றும் பூ மரங்களை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு பி.ஆர்.ஜி அருண்குமார் அவர்கள் முன்னிலையில் தேசியக்கொடியை காலையில் 9 மணி அளவில் ஏற்றப்பட்டு அதன் பின்னர் மரக்கன்றுகளை பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி திரு. நமசிவாயம் அவர்கள், பேரூர் டிஎஸ்பி திரு. ராஜபாண்டியன் அவர்கள், துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர், திரு. ஞானசேகரன் அவர்கள், ராஜராமச்சந்திரன் அவர்கள் மற்றும் 13ஆம் வார்டு கவுன்சிலர் திருமதி. சுமாதி அவர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் ஆகியோர் உடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட சங்கம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.